இங்கிலாந்திடம் தோற்றது ஏன்? மிதாலி ராஜ் விளக்கம்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றாலும் ரசிகர்களின் மனதை வென்று விட்டனர் இந்திய அணி வீரர்கள்.

நாடு திரும்பிய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய அணித்தலைவர் மிதாலி ராஜ், போதிய அனுபவம் இல்லாததும், பயம் கலந்த நெருக்கடியுடன் விளையாடியதே தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், ஒருநேரத்தில் இரு அணிக்குமே போட்டி சாதகமான ஒன்றாக இருந்தது.

யார் வேண்டாலும் வெற்றி பெறலாம் என்ற சூழலில் பதற்றமடைந்து விட்டோம், இதனால்தான் விக்கெட்டுகளை இழக்க நேரிட்டது.

அச்சூழலை இங்கிலாந்து அணி வீரர்கள் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.

தற்போதைய அணி வீரர்கள் அனுபவமில்லாதவர்கள் என்ற போதிலும் சிறப்பாகவே விளையாடினர், இந்த அனுபவம் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers