கோஹ்லி பற்றி பேசிய ரவிசாஸ்திரி: நோஸ் கட் செய்த கங்குலி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணி, இலங்கை அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை அணி வீழ்த்தி அசத்தியது.

அந்நிய மண்ணில் இந்திய அணி பெற்ற இமாலய வெற்றி இது ஆகும்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், இதுவரை இந்திய தலைவர்கள் யாருக்கும் இல்லாத தகுதி கோஹ்லிக்கு உள்ளது என தெரிவித்திருந்தார்.

இதை அறிந்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி, ரவி சாஸ்திரி இந்திய அணியின் முன்னாள் தலைவர்களின் பல்வேறு சாதனைகளை மறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

அவர், முந்தைய காலத்தில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து 15 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி தொடரை வென்றது.

இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 2007-ல் வீழ்த்தியது என பல சாதனைகளை ரவிசாஸ்திரி மறந்துவிட்டார் என நினைப்பதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers