மக்களுக்காக மீண்டும் களமிறங்குகிறார் ஓய்வு பெற்ற திலகரத்னே தில்ஷன்

Report Print Basu in கிரிக்கெட்

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இலங்கை நட்சத்திர வீரர் திலகரத்னே தில்ஷன், மீண்டும் இலங்கை அணிக்காக களமிறங்கி விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை அணியில் 17 ஆண்டாக விளையாடி வந்த முன்னணி வீரர் திலகரத்னே தில்ஷன், 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஓய்வை அறிவித்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை, வேர்ல்ட் XI அணிகள் மோதும் போட்டி நடத்தப்படவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணியில் ஓய்வு பெற்ற இலங்கை நட்சத்திர வீரர் திலகரத்னே தில்ஷன் களமிறங்கி விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers