இமாலய இலக்கை விரட்டும் இலங்கைக்கு பேரதிர்ச்சி: மோசமாக வெளியேறிய மெண்டிஸ்

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இலங்கை நட்சத்திர வீரர் மெண்டிஸ் மோசமாக ரன் அவுட் ஆகி வெளியேறிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பாண்டியாவின் அதிரடியால் முதல் இன்னிங்சில் 487 ஓட்டங்கள் குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே பயங்கர அதிர்ச்சியாக அமைந்தது. 9.3 ஓவரில் 38 ஓட்டங்களுக்கே இலங்கை அணி நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

துவக்க ஆட்டக்காரர்கள் தரங்கா 5 ஓட்டங்களிலும், கருணரத்ன 4 ஓட்டங்களிலும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

அடுத்து களமிறங்கி மெண்டிஸ் நிதானமாக விளையாடினார், எனினும் அணித்தலைவர் சந்திமாலின் தவறான அழைப்பால் மெண்டிஸ் மோசமாக ரன் அவுட் ஆகி 18 ஓட்டங்களில் வெளியேறினார்.

ஷமி வீசிய பந்தை அடித்த சந்திமால், மெண்டிஸை ஓட்டம் எடுக்க அழைத்தார். இந்நிலையில் பந்தை பறந்து பிடித்த அஸ்வின், பந்து வீச்சாளர் ஷமியை நோக்கி பந்தை வீச, ஷமி பந்தை பிடிக்க தவறவிட்டார்.

உடனே சந்திமால் ஓடாமல் பாதியிலே திரும்பினார். ஷமி பந்தை தவறவிட்டாலும், பின்னால் இருந்த குல்தீப் பந்தை பிடித்து பந்து வீச்சாளர் பக்கம் இருக்கும் ஸ்டம்பில் குறி பார்த்து அடிக்க மெண்டிஸ் மோசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

மெண்டிஸை தொடர்ந்து களமிறங்கிய மேத்யூஸ் டக் அவுட் ஆகி அதிர்ச்சிக்கொடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய திக்வெல்ல, சந்திமாலுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வந்தார்.

எனினும், திக்வெல்லவும் 29 ஓட்டங்களில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய பெரேராவும் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

தற்போது, இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் எடுத்து திணறி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers