செய்த தவறிலிருந்து பாடம் கற்க வேண்டும்: தோல்வி குறித்து இலங்கை அணித்தலைவர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
467Shares
467Shares
ibctamil.com

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் செய்த தவறிலிருந்து பாடம் கற்க வேண்டும் என இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கா கூறியுள்ளார்.

இலங்கை - இந்தியா இடையே நேற்று நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தோல்விக்கு பின்னர் பேசிய இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கா, தொடக்கத்தில் நாங்கள் நன்றாக விளையாடினாலும், பின்னர் அதை பயன்ப்படுத்த தவறிவிட்டோம்.

பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவராவது பெரிய ஓட்டங்களை குவித்திருக்க வேண்டும்.

300 ஓட்டங்களை அணி குவிக்க வேண்டுமென்றால் ஆரம்பத்திலிருந்தே அடித்தளத்தை சிறப்பாக அமைக்க வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த விடயம் தான் எங்கள் அணிக்கு பிரச்சனையாக உள்ளது என கூறியுள்ளார்.

ஒரு சமயம் 300 ஓட்டங்களை தொடுவது போல தெரிந்தாலும், எதிர்பாராதவிதமாக 216 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்களை இழந்து விட்டோம்.

இந்திய அணி கடைசி நேரத்தில் அபாரமாக விளையாடியது. இந்த போட்டியில் செய்த தவறிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என தரங்கா கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்