இலங்கை ரசிகர்களுக்கு குமார் சங்ககாரா அன்பான வேண்டுகோள்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
822Shares
822Shares
ibctamil.com

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுவதுமாக வென்றுள்ளது.

தொடர்ந்து இலங்கை அணி தோல்வியடைந்து வருவது அந்நாட்டு ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தம்புள்ளையில் ரசிகர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இதனை அறிந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் ஜாம்பவானுமான சங்ககாரா காணொளி மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அன்புள்ள ரசிகர்களே, நீங்கள் கிரிக்கெட் விளையாட்டில் எந்த அளவுக்கு ஆதரவு தருகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

நாங்கள் வெற்றியடைந்த நேரத்தில் எங்களோடு இணைந்து வெற்றியை கொண்டாடினீர்கள், தோல்வியில் துவண்டோடு எங்களோடு இணைந்து அதிலும் பங்ககெடுத்துக்கொண்டீர்கள்.

தற்போது, நம் நாட்டின் அணி தடுமாறும்போது ரசிகர்களாகிய உங்களின் அன்பும், ஆதரவும் எனக்கு அவசியம் தேவைப்படுகிறது, உங்களது அன்பும், ஆதரவும் தான் வீரர்களின் பலம், எனவே ஒருவரை ஒருவர் ஆதரிப்போம் என கூறியுள்ளார்.

தற்போது மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஜமெய்க்கா தளவஹாஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்