டோனி ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்ற ரவிசாஸ்திரி: என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் வரும் 2019-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியை தயார்படுத்த வேண்டும் என்பதால், உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் வரும் தொடர்களில் இந்திய வீரர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தேடுக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்.

இதன் காரணமாக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான யுவராஜ், ரெய்னா போன்ற வீரர்கள் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் வெற்றித் தலைவரான டோனியும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே, அவரை எதிர்வரும் தொடர்களில் எதிர்பார்க்க முடியும் என்று தேர்வு குழு தலைவர் பிரசாத் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து டோனியின் வயது, மற்றும் பார்ம் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்த வருவதால், அவர் எப்போது வேண்டும் என்றாலும், ஓய்வை அறிவிப்பார்.

இதனால் அவர் 2019-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவாரா என்பது சந்தேகம் தான் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, டோனி போன்ற ஒரு ஜாம்பவானை எங்கே சென்று இனி தேட முடியும்.

கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் வரிசையில் சாதித்த ஒரு வீரரை நாம் நிச்சயம் மதித்தாக வேண்டும். ஒரு வீரரை போட்டிக்கு தேர்ந்தெடுப்பதில் உடற்தகுதி தான் முக்கியபங்கு வகிக்கிறது.

அந்த விஷயத்தில் தோனி, கில்லி தான் என்று, அவர் 2019-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் கண்டிப்பாக விளையாடுவார் என்று கூறியுள்ளார்.

டோனி விளையாடுவாரா அல்லது ஓய்வை அறிவித்துவிடுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, டோனி நிச்சயம் அடுத்த உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவார் என்று ரவிசாஸ்திரி கூறியதால், டோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers