கடைசி ஓவரில் த்ரில்.. வானவேடிக்கை காட்டிய இலங்கை வீரர்: உலக லெவன் அணி அபாரம்

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி வீரர் திசார பெராராவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் உலக லெவன் அணி த்ரில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கடாபி மைதானத்தில் நடைபெற்றது. அதன் படி நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி தலைவர் சர்பராஸ் அகமது துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் களம் இறங்கினர். பகர் சமான் 13 பந்தில் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பாகிஸ்தான் அணி 12.2 ஓவரில் 100 ஓட்டங்களைத் தொட்டது.

ஷேசாத்(43),பாபர் ஆசம்(45), என வெளியேற, பாகிஸ்தான் அணி 16.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. இவர்களைத் தொடர்ந்து சோயிப் மாலிக் 23 பந்தில் 39 ஓட்டங்களிலும், சர்பிராஸ் அஹமது ஓட்டகம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் குவித்தது.

175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர்.

இக்பால் 23 ஓட்டங்களில் சோஹைல் கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் பெய்ன் 10 ஓட்டங்களில் இமாத் வாசிம் வேகத்தில் போல்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லா 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

தலைவர் டூபிளஸிஸ் 20 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய திசாரா பெரேரா - ஹாசிம் அம்லாவுடன் ஜோடி சேர்ந்து வெற்றியை உறுதி செய்தார்.

உலக லெவன் அணி இறுதியாக 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஹாசிம் அம்லா 72 ஓட்டங்களுடனும் அதிரடியாக விளையாடிய திசாரா பெரேரா 19 பந்துகளில் 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். திசாரா பெரேரா ஐந்து சிக்ஸர்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...