அதிலிருந்து மீள்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ரோகித் சர்மா ஓபன் டாக்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதற்காக இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், துவக்க வீரருமான ரோகித் சர்மா இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பது சுலபமானது இல்லை என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு கிரிக்கெட் வீரர் காயத்தில் இருந்து மீண்டு வருவது என்பது எளிதான ஒன்று அல்ல, ஆனால் அனைவரும் அதை ஈசியாக தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் இதைவிட கடினமான விஷயம் என்பது கிரிக்கெட்டில் இல்லை. அறுவைசிகிச்சைக்கு பின் மனம் தான் முதல் எதிரி, முன்பு போல செயல்பட விடாது.

இதனால் ஒருவரை குறை சொல்வது சுலபம், அதை செயல்படுத்துவது மிகவும் கடினம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்