நான் ஜூனியர் கிறிஸ் கெய்லா? சிலிர்க்கும் இளம் வீரர்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

என்னை, இளம் கிறிஸ் கெய்ல் என்றே எல்லோரும் அழைக்கிறார்கள் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரர் எவின் லெவிஸ் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 62 பந்தில் 125 ஓட்டங்கள் குவித்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர் எவின் லெவிஸ்.

இதில் 12 சிக்சர்களும் அடங்கும். ஆனால் அதே போட்டியில் கிறிஸ் கெய்ல் வெறும் 18 ஓட்டங்களில் வெளியேறினார். மட்டுமின்றி இந்தியாவுக்கு எதிரான மற்றொரு டி20 போட்டியில் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார் எவின் லெவிஸ்.

இதனால் வெஸ்ட் இண்டீஸின் அடுத்த கிறிஸ் கெய்ல் என எவினை புகழ ,ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் குறித்த ஒப்பீடு தொடர்பில் பேசிய எவின், நானும் கெய்லும்பலமுறை வலை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். அவர் எப்போதும் எனக்கு ஆலோசனை சொல்வார், அதுதான் எனது வளர்ச்சிக்கு காரணமாக கருதுகிறேன் என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்