சண்டிமாலின் தலைமை பிரமிக்க வைத்தது: புகழ்ந்து தள்ளிய ஜாம்பவான் சங்ககாரா

Report Print Raju Raju in கிரிக்கெட்
572Shares
572Shares
Seylon Bank Promotion

தினேஷ் சண்டிமாலின் தலைமை சிறப்பாகவும், பிரமிப்பாகவும் இருந்தது என குமார் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார்.

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக 155 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி தலைவர் சண்டிமால், இரண்டாவது டெஸ்டில் அரை சதம் அடித்தார்.

இதோடு மிக திறமையாக அணியை வழிநடத்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

இது குறித்து கூறிய இலங்கை அணியின் ஜாம்பவான் சங்ககாரா, இலங்கை அணிக்கு இது தகுதியான வெற்றியாகும்.

சண்டிமாலின் சிறப்பான தலைமையின் கீழ் இலங்கை கடுமையாக உழைத்தது. ரங்கனா மற்றும் திலுருவன் ஆட்டமும் சிறப்பாக இருந்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் சண்டிமால் அழுத்தத்தை எதிர்கொண்ட விதம் சிறப்பாக இருந்தது.

சண்டிமாலின் தலைமை பிரமிப்பாக இருந்த அதே சமயத்தில், பொறுப்பை உணர்ந்து துடுப்பாட்டத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டது பாராட்டுகுரியது.

சண்டிமால் டெஸ்ட் கிரிக்கெட் போன்றே ஒருநாள், டி20 போட்டிகளிலும் அணிக்காக விளையாட வேண்டும்.

அவரின் முழு திறமையை இனி தான் நாம் பார்க்க போகிறோம். டெஸ்ட் போட்டியில் 10,000 ஓட்டங்களை சண்டிமால் குவிப்பார் என தான் நம்புவதாக சங்ககாரா கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்