இப்படி அவுட்டாயிட்டாரே டோனி: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்
1071Shares
1071Shares
lankasrimarket.com

விக்கெட் கீப்பிங்கில் கில்லாடியான டோனி, நேற்றைய அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் ஸ்டெம்பிங் முறையில் அவுட்டான வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இடையில் நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் டோனி 13 ஒட்டங்களில் தனது ஐபில் சக அணி வீரரான ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் அவுட்டானார்.

திறமையான விக்கெட் கீப்பராக அறியப்படும் டோனி எதிரணியின் பல வீரர்களை ஸ்டெம்பிங் முறையில் பலமுறை ஆட்டமிழக்க செய்துள்ளார்.

ஆனால் நேற்றைய போட்டியில் ஜாம்பா பந்துவீசிய போது கோட்டை தாண்டி வந்து பந்தை அடிக்க டோனி முயன்றார்.

ஆனால் டோனி பேட்டில் படாத பந்து விக்கெட் கீப்பர் டிம் பெயின் கையில் தஞ்சமடைந்தது. இதையடுது டோனி கோட்டை தொட முயலும் முன்னரே பெயின் அசத்தலாக ஸ்டெம்பிங் செய்து டோனியை அவுட்டாக்கினார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்