சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஆஷிஷ் நெஹ்ரா

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
290Shares
290Shares
Promotion

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

1999ம் ஆண்டு அறிமுகமான ஆஷிஷ் நெஹ்ரா இதுவரையிலும் 17 டெஸ்ட், 120 ஒருநாள் போட்டி, 20 டுவென்டி- 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு வரவுள்ள நியூலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நவம்பர் 1ம் திகதி நடைபெறுகிறது.

இப்போட்டி நெஹ்ராவின் சொந்த ஊரில் நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெற முடிவு செய்துள்ளாராம்.

நவம்பர் 1ம் திகதிக்கு பின்னர் ஓய்வு முடிவை அறிவிக்கப் போவதாகவும், இந்திய அணி நிர்வாகம், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அணித்தலைவர் வீராட் கோஹ்லிக்கு தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்கபோவதில்லை என முடிவெடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்