இங்கிலாந்து வீரர்களுக்கு அவுஸ்திரேலிய வீரரின் எச்சரிக்கை

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
260Shares
260Shares
Seylon Bank Promotion

இங்கிலாந்து வீரர்கள் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள பயிற்சி எடுத்துக்கொள்ளுமாறு அவுஸ்திரேலிய வீரரான பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், வரவிருக்கும் ஆஷஸ் தொடரில் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் நிறைய வீசுவோம், அதிவேகமில்லாத பிட்ச்சுகளிலேயே இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

எனவே தென் ஆப்ரிக்கா, அவுஸ்திரேலியாவில் இது கடினம், நாங்கள் வேகம் மிகுந்த பிட்சுகளில் வளர்ந்தவர்கள்.

2013-14 ஒயிட்வாஷில் மிட்செல் ஜான்சன் இங்கிலாந்தை சிதைத்தது போல் நானும் இப்பணியை செய்ய ஆவலாக இருக்கிறேன்.

ஜோ ரூட், அலைஸ்டர் குக்கை வீழ்த்துவது முக்கியம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்