இந்திய அணி மெத்தனமாக இருக்க கூடாது: கங்குலி எச்சரிக்கை

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி வரும் 22-ஆம் திகதி மும்மையின் வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் சமீபத்திய இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்ட போதும் நியூசிலாந்து அணியை சாதரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என முன்னாள் இந்திய அணியின் தலைவர் கங்குலி எச்சரித்துள்ளார்.

கங்குலி கூறுகையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணியே கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் போட்டியின் போக்கை மாற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணியிலும் உள்ளனர். அதனால் இந்திய அணி மெத்தனமாக இருக்க கூடாது. என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers