நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு யார் காரணம்: கோஹ்லி விளக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 40 ஓட்டங்கள் அதிகமாக எடுத்திருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம் என்று இந்திய அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி குவித்த 280 ஓட்டங்களை நியூசிலாந்து அணி அசால்ட்டாக எட்டி பிடித்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் டாம் லாதம் 103 ஓட்டங்களும், அனுபவ வீரர் ரோஸ் டெய்டலர் 95 ஓட்டங்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியுடனான தோல்வி குறித்து கோஹ்லி கூறுகையில், லாதம் மற்றும் டெய்லர் சிறப்பாக விளையாடினர். நாங்கள் 275 ஓட்டங்களே போதும் என்று தான் நினைத்திருந்தோம், ஆனால் லாதம் மற்றும் டெய்லர் அதை தவிடு பொடியாக்கிவிட்டனர்.

அதுமட்டுமின்றி ரன் அவுட் தவிர அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு தரவில்லை, ஒரு போட்டியில் 200 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைந்துவிட்டால் அது வெற்றி தான். அது போன்று லாதம் மற்றும் டெய்லரின் ஆட்டம் இருந்தது.

மேலும் நாங்கள் துடுப்பெடுத்தாடும் போது கடைசி 13 முதல் 14 ஓவர்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது, துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி இன்னும் 40 ஓட்டங்கள் அதிகமாக எடுத்திருந்தால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்