பாகிஸ்தானுடன் டி20: பயிற்சியாளராக ஹசன் திலகரத்னே தேர்வு

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து பயிற்சியாளர் நிக் போத்தாஸ் வெளியேறியதை தொடர்ந்து துடுப்பாட்ட பயிற்சியாளர் ஹசன் திலகரத்னே தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

போத்தாஸின் குடும்பத்தினர் அவர் பாகிஸ்தான் செல்வது குறித்து அதிருப்தி தெரிவித்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அவரைப் போலவே பயிற்சியாளர் நிக் லீ மற்றும் உடற்சிகிச்சை நிபுணர் நிர்மலன் தனபாலசிங்கம் ஆகியோரும் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

சாம்பியன் டிராஃபிக்குபிறகு நிக் போத்தாஸ் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்