ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா? மலைக்க வைத்த விராட் கோஹ்லி

Report Print Raju Raju in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோஹ்லி பல்வேறு புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையில் நேற்று வான்கடே மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி 121 ஓட்டங்கள் குவித்தார்.

இப்போட்டியின் மூலம் கோஹ்லி பல புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

  • நேற்றைய போட்டி கோஹ்லிக்கு 200-வது போட்டியாக அமைந்த நிலையில், 200 போட்டிகளில் விளையாடிய 14-வது இந்திய வீரர் கோஹ்லி ஆவார்.
  • 200வது போட்டியில் விளையாடுவதற்கு முன்னரே, இதுவரை 200 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் எடுத்த ஓட்டங்களை விட அதிக ஓட்டங்களை கோஹ்லி தனது 199 போட்டியிலேயே எடுத்து சாதித்துள்ளார்.
  • 200வது போட்டியில் சதமடித்த வீரர்களில் இரண்டாவது வீரராக கோஹ்லி திகழ்கிறார். இதற்கு முன்னர் டிவில்லியர்ஸ் இதை செய்துள்ளார்.
  • சர்வதேச அளவில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கோஹ்லி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
  • நியூசிலாந்துக்கு எதிராக குறைந்த போட்டியில் 1000 ஓட்டங்களை கடந்த வீரர்களின் பட்டியலில் கோஹ்லி தற்போது முதலிடத்தில் உள்ளார்.
  • வான்கடே மைதானத்தில் அதிக ஓட்டம் குவித்த வீரர்கள் பட்டியலில் கோஹ்லி நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers