வான்கடே அதிர களமிறங்கிய டோனியின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மும்பையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் முதலில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, தினேஷ் கார்த்திக் அவுட்டானவுடன், இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி மைதானத்திற்கு வந்தார்.

அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பெரும்பாலானோர் எழுந்து நின்று டோனி..டோனி என்று கரகோஷம் மற்றும் விசிலும் எழுப்பி அரங்கத்தையே அதிரவைத்தனர்.

இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது, தற்போது வைரலாகியுள்ளது.

சமீபகாலமாக டோனியின் ஆட்டம் மற்றும் வயது காரணமாக அவர் மீது பல்வேறு விமர்ச்சனங்கள் எழுந்து வந்தாலும், அவருக்கான மவுசு குறையவில்லை என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.

ஆனால் இப்போட்டியில் டோனி 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்