வீராட் கோஹ்லியை விரட்டிய ரசிகர்: மைதானத்தில் பரபரப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், கோஹ்லியை நோக்கி ரசிகர் ஓடிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் வீராட் கோஹ்லி 113 ஓட்டங்கள் எடுத்தார், அவர் சதமடித்த போது கான்பூர் மைதானமே அதிரும் வகையில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் ஆர்வ மிகுதியால் கோஹ்லியை நோக்கி மைதானத்திற்குள் ஓடி வந்தார்.

அதனைக் கண்ட காவல் அதிகாரிகள் நடுவர் இருக்கும் இடத்திலேயே அவரை மடக்கிப் பிடித்தனர். அவர் கோஹ்லி பெயரையும், அவரின் 18 என்ற எண்ணையும் கொண்ட ஜெர்சியை அணிந்து இருந்தார்.

கிரிக்கெட் விதிகளின்படி ரசிகர்கள் இவ்வாறு உள்ளே நுழைவது குற்றமாகும், அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் மைதானத்தில் சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்