இலங்கை வீரர்களின் மன தைரியத்தை பாராட்டுகிறோம்: பாகிஸ்தான் ரசிகர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முழுவதுமாக கைப்பற்றியது.

கடைசி டி20 போட்டி பாகிஸ்தானில் நடந்தபோது பாகிஸ்தானிய ரசிகர்கள் பலர் இலங்கை தேசிய கொடிகளை கைகளில் ஏந்தி அசைத்தனர்.

இலங்கைக்கு மீண்டும் விளையாட வந்த இலங்கை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்கள் கொடிகளை ஏந்தியிருந்தனர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில், இலங்கை வீரர்கள் சென்ற பேருந்து தீவிரவாதிகளினால் தாக்குதலுக்கு உள்ளானது.

எனினும் தற்போது பாகிஸ்தானில் விளையாட வந்திருக்கும் இலங்கை வீரர்களின் மனதைரியத்தை பாராட்டுவதாகவும், இதன் மூலம் தாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பதிவாக இருக்கும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்