வீராட் கோஹ்லியின் தொடர் சாதனைகளுக்கு காரணம் இதுதான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

வீராட் கோஹ்லி ஒருமுறை செய்த தவறிலிருந்து அடுத்தமுறை பாடம் கற்பதே அவரின் நிலைப்புத்தன்மை மற்றும் சாதனைகளுக்கு காரணம் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் வீராட் கோஹ்லி நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் விளாசி அசத்தினார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் 113 ஓட்டங்களை விளாசியதன் மூலம் பல்வேறு புதிய சாதனைகளை கோஹ்லி படைத்தார்.

அதிலும் முக்கியமாக சர்வதேச கிரிக்கெட்டில் மிக வேகமாக 9000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆனார், இதை வெறும் 194 இன்னிங்சில் கோஹ்லி செய்துள்ளார்.

அதோடு 889 புள்ளிகள் பெற்று உலகின் நம்பர் 1 துடுப்பாட்ட வீரராக கோஹ்லி திகழ்கிறார்.

இப்படி நிலைப்புத்தன்மையாக விளையாடி கோஹ்லி தொடர்ந்து சாதிக்க காரணம் குறித்து இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு தடவை தான் செய்யும் தவறிலிருந்து பாடம் கற்கும் கோஹ்லி அதை மீண்டும் செய்யக்கூடாது என முயற்சிப்பதே அவரின் வெற்றிக்கு உதவுகிறது என நினைக்கிறேன்.

ஒரே மாதிரி தொடர்ந்து அவுட்டாவது கிரிக்கெட்டில் சகஜம் தான், ஆனால் அதை முடிந்தளவு தடுக்க கோஹ்லி முயல்வதே அவரின் நிலைப்புத்தன்மைக்கு காரணம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...