இலங்கை கிரிக்கெட் அணி இதே நிலையில் இருந்தால் 2019 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெறுவது கடினம் என அர்ஜூனா ரணதுங்க கூறியுள்ளார்.
இலங்கை அணியின் ஜாம்பவான் அர்ஜூனா ரணதுங்க அளித்துள்ள பேட்டியில், இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் இலங்கை அணி வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்.
இதே நிலையில் இருந்தால் 2019 உலக கிண்ணத்தை வெல்வதும் கடினம் தான், இலங்கை வீரர்கள் திறமையானவர்கள் தான்.
ஆனால் கிரிக்கெட்டை நிர்வாகிக்க முடியாத நிர்வாகமே இன்று காணப்படுகிறது, வீரர்களிடம் எந்த பிரச்சனையும் இல்லை.
அவர்களின் மனநிலையை சரி செய்து நாட்டுக்காக விளையாட வைத்தால் வெற்றி பெறுவது உறுதி என கூறியுள்ளார்.