இலங்கை அணியின் இளம் வீரரை புகழும் பயிற்சியாளர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் தஷுன் சானக்க-வை அந்த அணியின் பயிற்சியாளர் புகழ்ந்துள்ளார்.

லாகூரில், பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 181 ஒட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இலங்கை 21 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது ஐந்தாவது வீரராக களமிறங்கிய சானக்க நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

பின்னர், தனது அதிரடியைக் காட்டிய அவர் 36 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் மீண்டும் ஒருமுறை தான் ஒரு சிறந்த அதிரடி துடுப்பாட்ட வீரர் என்று கிரிக்கெட் உலகிற்கு நிரூபித்தார்.

இலங்கை அணியின் பயிற்சியாளர் விஜிகூன் கூறுகையில், தஷுனுக்கு முதலில் சிறிது நேரம் தேவைப்படும். ஆனால் அவர் 10 அல்லது 15 பந்துகளை எதிர்கொண்டுவிட்டால், தனது ஆட்டத்தினை அவரே கட்டமைத்துக் கொண்டு மிகப்பெரிய அளவிலான ஓட்டங்களை குவிப்பார்.

அவர் சிக்ஸர்கள் அடிப்பதில் கைதேர்ந்தவர், தற்போதைய இலங்கை அணியில் அவர் இடம் பிடித்திருப்பது அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என தெரிவித்துள்ளார்.

சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவரான சானக்க, 44 முதல் தர போட்டிகளில் 82 சிக்ஸர்களை அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்