70 ஆண்டுகள் சாதனையை முறியடித்த இந்திய வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ரஞ்சிக்கிண்ண தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர் புஜாரா 70 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ரஞ்சிகிண்ண போட்டிகளின் இந்த வருட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதன் நான்காவது சுற்றுப்போட்டிகளில் சவுராஸ்டிரா அணி, ஜார்கண்ட் அணியை எதிர்கொள்கிறது.

இப்போட்டியில் சவுராஸ்டிரா அணிக்காக இந்திய அணி வீரர் புஜாரா களமிறங்கி விளையாடினார்.

அந்த அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 553 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது, அபாரமாக விளையாடிய புஜாரா 204 ஓட்டங்களை எடுத்தார்.

இது புஜாரா முதல் தர போட்டிகளில் விளாசிய 12-வது இரட்டை சதமாகும். இதன்மூலம் முதல் தர போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக முன்னாள் வீரர் விஜர் மெர்சண்ட் 11 இரட்டை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை 70 ஆண்டுகள் கழித்து புஜாரா முறியடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்