இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராகும் இந்திய அணியின் ஜாம்பவான்?

Report Print Raju Raju in கிரிக்கெட்
621Shares

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இந்திய அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய நிபந்தனைகளை முன்வைத்தே தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கும்ப்ளே முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இது குறித்த முழுமையான தகவல்கள் வெளிவராத நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பதை உத்தியோகப்பூர்வமாக தெரிவிப்போம் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அண்மைக் காலமாக திணறி வரும் இலங்கை அணியை வலுப்படுத்தவே நிரந்தர பயிற்சியாளரை நியமிக்க இலங்கை அணி நிர்வாகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே வங்கதேச அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் இலங்கை அணி முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்க இலங்கை அணிக்கு பயிற்சியாளராக ஆக விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்