நியூசிலாந்தை மிரள வைத்த இந்தியாவின் பீல்டிங்: வெற்றி பெற்றதற்கான காரணங்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
747Shares

நியூசிலாந்து அணிக்கு எதிரான பரபரப்பான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றதற்கு இந்திய அணியின் பீல்டிங்கே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

20 போட்டியே அதிரடியாக இருக்கும் போது, 8 ஓவர் போட்டியை சொல்லவா வேண்டும், இப்போட்டியில் இந்திய அணி வீரர்களின் பீல்டிங் மற்றும் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது.

அதுவே இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

8 ஓவர்களுக்கு 68 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முதல் அடியே அதிரடி வீரர் கப்டிலை முதல் ஓவரிலே புவனேஸ்வர் குமார் வெளியேற்றியது.

இதைத் தொடர்ந்து அடுத்தபடியாக இந்த தொடரில் இந்திய அணியை ஆட்டம் காணவைத்த முன்ரோவை ரோகித் சர்மா தன்னுடைய அற்புதமான கேட்சால் வெளியேற்றினார். அதற்கு முந்தைய போட்டியில் தான் முன்ரோ சதம் அடித்திருந்தார்.

மூன்றாவது நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சனை, ஹார்திக் பாண்ட்யா தன்னுடைய துல்லியமான த்ரோவால் ரன் அவுட் ஆக்கி பவுலியன் திரும்ப வைத்தது நியூசிலாந்து அணியை தோல்விக்கே அழைத்துச் சென்றுவிட்டது.

மேலும் குறிப்பாக 8 ஓவர் போட்டி என்பதால், இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை தவிர, ஷிகர் தவான், அணியின் தலைவர் விராட் கோஹ்லி, மணீஷ் பாண்டே ஆகியோர் தங்கள் பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அடித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்