அந்த போட்டிகளை பார்த்த போது கவலையாக இருந்தது: மேத்யூஸ் உருக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

வீட்டில் இருந்து இலங்கை அணி விளையாடிய போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்த போது மிகவும் கவலையாக இருந்தது என ஏஞ்சலா மேத்யூஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதற்காக இலங்கை அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அணி வீரரான மேத்யூஸ் காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடாமல் இருந்தார்.

அதுமட்டுமின்றி கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் 37 சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் போட்டிகளில் மேத்யூஸ் விளையாடவில்லை.

இதையடுத்து தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள மேத்யூஸ், எனக்கு இரண்டு வாரங்கள் மிகவும் கவலைக்குரியதாக அமைந்திருந்தது. ஏனெனில், எனது அணி வீரர்கள் விளையாடுவதை நான் வீட்டிலிருந்து தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இருப்பினும் கடந்த 2013-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2016-ஆம் ஆண்டு வரை எனக்கு நல்லவிதமாக அமைந்திருந்தது. ஏனெனில் அப்போதைய காலக்கட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டேன்.

அப்படி ஓய்வின்றி விளையாடியதன் காரணமாகத்தான் தற்போது ஓய்வை அனுபவிக்க வைக்கின்றது போலத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் மேத்யூஸ் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான்காவது வீரராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்