முக்கிய வீரருக்கு ஓய்வு: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.

இத்தொடருக்கு 16 வீரர்களின் பட்டியலை இந்திய அணி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சகல துறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட அணியில் அவர் இடம்பெற்றிருந்தாலும், அதிக போட்டிகளில் பங்கேற்றிருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீபகாலமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்த அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு இத்தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி

 • விராட் கோஹ்லி (தலைவர்)
 • கே.எல். ராகுல்
 • முரளி விஜய்
 • ஷிகர் தவான்
 • சட்டீஸ்வர் புஜாரா
 • அஜிங்கியா ரஹானே (துணைத் தலைவர்)
 • ரோகித் ஷர்மா
 • விருத்திமான் சாஹா
 • ரவிச்சந்திரன் அஸ்வின்
 • ரவீந்திர ஜடேஜா
 • குல்தீப் யாதவ்
 • முகமது ஷமி
 • உமேஷ் யாதவ்
 • புவனேஷ்வர் குமார்
 • இஷாந்த் ஷர்மா

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்