இன்று பயிற்சி ஆட்டம்: இலங்கை வீரரை புகழ்ந்த சஞ்சு சாம்சன்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் இன்று இரு அணிகளும் மோதும் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது.

இலங்கை அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான 3-ம் நிலை வீரர்களை உள்ளடக்கிய வாரியத் தலைவர் அணி எதிர்கொள்கிறது.

கொல்கத்தாவில் இன்று தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் முனைப்புடன் செயல்பட இலங்கை வீரர்கள் தயாராக உள்ளனர்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மண்ணில் இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய அரபு எமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் 2-0 என்ற கணக்கில் வென்றதால் அதே உத்வேகத்துடன் செயல்படவுள்ளது.

இருப்பினும் ஆல் ரவுண்டர் ஏஞ்சலா மேத்யூஸ், மூத்த வீரர் ரங்கன ஹேரத் தவிர மற்ற வீரர்கள் இந்திய மண்ணின் முதன்முறையாக டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளனர்.

இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில், ரங்கன ஹேரத் அனுபவம் வாய்ந்த வீரர், அவர்களுக்கு இது பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் மிகச்சிறந்த வீரரை எதிர்கொள்ள சிறப்பான வாய்ப்பாக எங்களுக்கு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்