யுவராஜ் மற்றும் ரெய்னாவின் நிலைக்கு யார் காரணம்?

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
455Shares
455Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களாக விளங்கிய சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரும் தற்போது அணியில் இடம்பெறாமல் இருப்பதற்கு அணித்தலைவர் விராட் கோஹ்லி தான் காரணம் என கூறப்படுகிறது.

உள்ளூர் போட்டிகளில் யுவராஜ் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துடன் விளையாடிய ஒருநாள் போட்டி தொடரில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய யுவராஜ் சிங், ஒருநாள் போட்டிகளில் அவருடைய அதிகபட்ச ரன்னை அடித்தார். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த யுவராஜ், அந்த பார்மை தக்கவைத்து கொள்ள தவறிவிட்டார்.

அதே போன்று சுரேஷ் ரெய்னாவும் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக விளையாடியதோடு சரி, அதற்கு பின்னர் விளையாடவில்லை.

யுவராஜ் சிங் கடந்த 5 ஆண்டில் போதிய கிரிக்கெட் விளையாடவில்லை மற்றும் விளையாடிய போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் படி சோபிக்கவில்லை. இதே நிலைமை தான் சுரேஷ் ரெய்னாவுக்கும்.

இதற்கிடையேதான் இந்திய அணி வீரர்களுக்கு வைக்கப்பட்ட ‘யோ-யோ’ தேர்வில் இவர்கள் இருவரும் தேர்சி பெறவில்லை. இதன் காரணத்தினாலேயே இவர்கள் இருவரும் அணியில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்