கிரிக்கெட் விருது விழாவில் பாடல் பாடி அசத்திய இலங்கை அணி வீரர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்
394Shares
394Shares
ibctamil.com

கிரிக்கெட் விருது விழா ஒன்றில் இலங்கை அணி வீரர்கள், மேடையில் பாடல்கள் பாடி பார்வையாளர்களை அசத்தியுள்ளனர்.

’டையலாக் கிரிக்கெட் அவார்ட்ஸ் 2017’ எனும் விருது விழாவில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவானது, முதல் உலக கோப்பையை பெற்றுத் தந்த கபில் தேவ்வின் முன்னிலையில் டெல்லியில் நடைபெற்றது.

விழா மேடையில் ஏறிய இலங்கையின் டிக்வெல்ல, சிறிவர்தனா, செனநாயகே, தனஞ்செயா ஆகியோர் புகழ்பெற்ற ஹிந்தி பாடலான ‘பெஹ்லா நஷா’ என்னும் பாடலை பாடினர்.

மேலும், இரண்டு தமிழ் பாடல்களை பாடியபோது, நட்சத்திர வீரர் தில்ஷனும், குலசேகராவும் மேடையில் ஏறி அவர்களுடன் கலந்து கொண்டனர். பின்னர், விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சிறந்த டி20 துடுப்பாட்ட வீரர் விருதை அசெலா குணரத்னேவும், சிறந்த டி20 பந்துவீச்சாளர் விருதை லதிஷ் மலிங்காவும், ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை ரங்கணா ஹெராத்தும் பெற்றனர்.

மேலும், சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் விருதை குசால் மெண்டிஸும், சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர் விருதை ஹெராத்தும் பெற்றனர். சிறந்த டெஸ்ட் ஆல்ரவுண்டர் விருதை தில்ரூவன் பெரேரா தட்டிச் சென்றார்.

சிறந்த ஒருநாள் போட்டி துடுப்பாட்ட வீரராக மெண்டிஸும், பந்துவீச்சாளராக லக்மலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நவம்பர் 16ஆம் திகதி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முதல் டெஸ்டில் மோதவுள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்