ஷமி- டிக்வெல்ல மோதல்! கோஹ்லியின் சைகை- உணர்ச்சிகரமான நிகழ்வுகள்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா- இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இப்போட்டியின் கடைசி நாளில் பல உணர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறின.

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிக் கொண்டிருக்கும் போது வீராட் கோஹ்லி, ரசிகர்களை நோக்கி “சத்தம் போதாது இன்னும் சத்தமிடுங்கள்” என்கிற ரீதியில் சைகை காட்டினார்.

இலங்கை அணியின் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்த நிலையில் டிக்வெல்லவுடன், சண்டிமால் இணைந்தார்.

19வது ஓவரின் இரண்டாவது பந்தை முகமது ஷமி வீச முயன்ற போது டிக்வெல்ல தயாராகவில்லை, தலையை குனிந்தபடியே பின்னால் செல்லுமாறு ஷமிக்கு சைகை காட்டினார்.

இதனையடுத்து பவுலிங் மார்க்கிலிருந்தே ஷமி, டிக்வெல்லவிடம் ஒரு சில வார்த்தைகளை பேசினார், அடுத்த பந்தில் டிக்வெல்லவுக்கு அருகில் சென்று பேசினார்.

மீண்டும் டிக்வெல்ல ஸ்டம்பிலிருந்து ஒதுங்கி கொள்ள முயற்சித்தார், இறுதியில் நடுவர் புகுந்து இரு அணிகளையும் சமாதானப்படுத்தினார்.

இவ்வாறு பல்வேறு உணர்ச்சிகரமான சம்பவங்களால் ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்