மின்னல் மனிதனிடம் பயிற்சி பெறும் அவுஸ்திரேலிய வீரர்கள்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மின்னல் வேக மனிதன் உசைன் போல்டிடம் வேகமாக ஓட பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் புகழ்பெற்ற ஆஷஸ் போட்டித் தொடர் வருகிற 23ம் திகதி தொடங்குகிறது.

இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவுஸ்திரேலிய வீரர்கள் சிலர் மின்னல் வேக மனிதன் உசைன் போல்டிடம் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

போட்டியின் போது மிக வேகமாக ஓடுவதை பழகிக்கும் கொள்ளும் விதமாக இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிக்குப் பின்னர் உசைன் போல்ட் ஓய்வுபெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்