இலங்கை அணியை தூசு தட்டியிருப்போம்: லோகேஷ் ராகுல்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

இலங்கை- இந்தியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது.

கடைசி நாள் ஆட்டத்தில், இலங்கை அணிக்கு இந்தியா 231 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்தியாவின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தது.

26.3 ஓவரில் 75 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. அப்போது வெளிச்சமின்மை காரணமாக ஐந்தாவது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது, இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்த ஆட்டத்தின் போது இலங்கை துடுப்பாட்ட வீரர் டிக்வெல்லா, தனது அணியை தோல்வியில் இருந்து மீட்பதற்காக, இந்திய வீரர் ஷமி பந்துவீச வரும்போது நேரத்தை வீணடிக்கும் விதமாக இரண்டு முறை அவரை திரும்பி போக சொன்னார்.

இது இந்திய வீரர்களை கடுப்பேற்றியதால் கோஹ்லி மற்றும் ஷமி ஆகியோர் இலங்கை வீரர்களிடம் சண்டைபோட முயன்றனர், பின்னர் நடுவரால் இரு அணிகளும் சமாதானம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து இந்திய வீரர் லோகேஷ் ராகுல் கூறியதாவது, 5 முதல் 6 ஓவர்கள் வீச வாய்ப்பு இருந்திருந்தால் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும் என்றும் 15 முதல் 20 நிமிட ஆட்டம் இருந்திருந்தால் இலங்கை அணியை வழக்கம் போல் அடித்து துவம்சம் செய்திருப்போம், ஆனால் இலங்கை வீரர்கள் நேரத்தை வீணடிக்கும் வேலைகளில் ஈடுபட்டதால் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நேரம் வீணானது.

ஆடுகளத்தில் 5 நாட்கள் ஆட்டம் நடைபெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்