மைதானத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் செய்த மோசமான செயல்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

அவுட் கொடுக்க மறுத்த நடுவரிடம் வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப்-அல்-ஹாசன் மோசமாக நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச பிரீமியர் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் 21வது போட்டியில் டாகா டய்னமைட்ஸ் அணியும், கோமில்லா விக்டோரியன்ஸ் அணிகளும் மோதின.

டாகா அணிக்காக விளையாடிய வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப்-அல்-ஹாசன் எதிரணி துடுப்பாட்ட வீரர் இம்ரூல் கயீஸுக்கு பந்து வீசினார்.

அப்போது ஷகிப் வீசிய பந்து இம்ரூல் கால் பேடில் பட்டது, இதையடுத்து எல்.பி.டபிள்-யூ முறையில் நடுவரிடம் ஷகிப் அவுட் கேட்டு முறையிட்டார்.

ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார். இதையடுத்து ஆத்திரமடைந்த ஷகிப் நடுவரை வார்த்தைகளால் வசைப்பாட தொடங்கினார்.

நடுவரை நோக்கி தொடர்ந்து கத்தியபடி அநாகரீகமாக நடந்து கொண்டார். இதையடுத்து குறித்த போட்டியில் 50 சதவீத ஊதியம் ஷகிப்புக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers