மிட்செல் ஜான்சனை விட பயங்கரமா பந்துவீசுறாங்க: ஸ்டீவ் ஸ்மித் பெருமிதம்

Report Print Kabilan in கிரிக்கெட்
232Shares
232Shares
ibctamil.com

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனை விட பயங்கரமாக இப்போதிருக்கும் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதாக அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாளை மோத உள்ளது.

இந்நிலையில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பாட் கமின்ஸ், ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் பந்து வீசுவதைப் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது.

அவர்கள் மிட்செல் ஜான்சனை விடவும் பயங்கரமாக பந்து வீசுகின்றனர், நான், கமின்ஸ் மற்றும் ஸ்டார்க்கின் பந்து வீச்சை வலை பயிற்சியின் போது எதிர்கொண்டேன்.

உண்மையிலேயே பயங்கரமான பந்து வீச்சாக இருந்தது, எனவே இது எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணியில் இடக்கை வீரர்கள் இருப்பதால், நாதன் லயனின் பங்களிப்பு மிக முக்கியமாக இருக்கும் எனவும், வார்னர் விரைவாக உடல்நிலை தேறி வருவதால் நாளைய ஆட்டத்தில் பங்கேற்பார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்