சங்காவை மீள நினைவுபடுத்தும் டிக்வெல்ல!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல தொடர்பில் சமூக வலைதளத்தில் எல்லோரும் தமது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். அனைத்துவகையான போட்டிகளிலும் இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுக்கவல்ல வீரராக நிரோஷான் டிக்வெல்ல வளர்ந்து வருகின்றார்.

குறிப்பாக முதலாவது டெஸ்ட் போட்டியில் இவர் மைதானத்தில் நடந்துகொண்ட விதம் பலரது பாராட்டுதலுக்கும் உள்ளாகியுள்ளது. கிரிக்கெட் விதிமுறைகளை மீறி வீரர்களை களத்தடுப்பில் வைத்திருந்ததை கவனித்து சிக்ஸர் விளாசிவிட்டு அதனை நடுவரிடம் முறையற்ற பந்தாக்க கோரியமைஇ இந்திய விக்கெட் காப்பாளர் சஹா பிடியெடுப்பு நிகழ்த்தி அதனை ஆட்டமிழப்பாக கோரியபோது, அது நிலத்தில் பட்டதாக சரியாக கணித்து வாதாடியாமை, மொஹமட் சாமியின் ஆக்ரோஷத்திற்கு மைதானத்தில் தனித்துநின்று எதிர்தமை உள்ளிட்ட பலதும் இன்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக எதிரணியினர் தகராறில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் அதனைக் கண்டு நடுங்கி விக்கெட்டை தாரைவார்க்காது எதிர்த்து நிற்கும் தைரியம் மட்டுமல்லாது, மிக சிறந்த கிரிக்கெட் அறிவு, தலைமை ஏற்கும் பக்குவம் உள்ளிட்ட பலவும் டிக்வெல்லவை ஒரு தரமான வீரராக அடையாளப்படுத்தி நிற்கின்றன.

அதோடு குமார் சங்ககாரா படித்த அதே கண்டி திரித்துவ கல்லூரியிலிருந்து இலங்கை கிரிக்கெட்டில் கால்பதித்திருக்கும் டிக்வெல்ல, சங்கக்காராவை நினைவுபடுத்தும் ஒருவராகவும் பலரும் புகழ்கின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers