ஆஷஸ் தொடரில் ஸ்டார்க்கின் வேகத்தால் நிலை குலைந்த ரூட்: அதிர்ச்சியடைந்த வீரர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
659Shares
659Shares
lankasrimarket.com

பிரிஸ்போனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், ஸ்டார்க்கின் அசுரத்தனமான பவுன்சரால், இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் நிலைதடுமாறினார்.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்போனில் நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 302 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 328 ஓட்டங்களும் எடுத்தது. அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் போது, இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க்கின் பந்து வீச்சை எதிர்கொண்டார்.

அப்போது பந்தானது பவுன்சர் ஆகி, ரூட்டின் முகத்தில் பட்டது. இதனால் ஹெல்மட்டில் இருந்த பாகம் ஒன்று தனியே கிழே விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீரர்கள் உடனடியாக ரூட்டிடம் வந்து ஆல் ரைட் என்று கேட்டனர்.

இருப்பினும் மருத்துவர் வந்து ரூட்டை சோதனை செய்தே விளையாட அனுமதித்தார். ஏனெனில் அவுஸ்திரேலிய அணியின் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தாக்கியதன் காரணமாக இறந்தார், இதனாலயே அவுஸ்திரேலிய வீரர்கள் ரூட்டிடம் சென்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்