96 ஆண்டுகால சாதனையை முறியடித்த தென் ஆப்பிரிக்க வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ மரைஸ் அதிவேகமாக 300 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஈஸ்ட் லண்டனில் நடைபெற்ற உள்நாட்டு முதல் தர போட்டியில், Border அணிக்காக ஆடிய மார்கோ மரைஸ், 191 பந்துகளில் 300 ஓட்டங்களை Eastern Province அணிக்கு எதிராக எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இதில் 35 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் அடக்கம், இதற்கு முன்பு, 1921ஆம் ஆண்டு சார்லி மெக்கார்ட்னி என்ற அவுஸ்திரேலிய வீரர், 221 பந்துகளில் நாட்டிங்கம் அணிக்கு எதிராக அடித்த முச்சதமே 96 ஆண்டுகளாக சாதனையாக இருந்து வந்தது.

24 வயதான மார்கோ மரைஸ் இந்த வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளார். Border அணி 82 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது களமிறங்கிய மார்கோ மரைஸ், தனது இணை வீரர் பிராட்லி வில்லியம்ஸுடன் சேர்ந்து 428 ஓட்டங்களை குவித்தார்.

மார்கோ 300 ஓட்டங்களும், பிராட்லி 113 ஓட்டங்களும் எடுத்து நாட் அவுட் ஆக இருந்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers