ஜாம்பவான்கள் கூட நிகழ்த்தாத சாதனையை புதிதாக படைத்துள்ள இலங்கை வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இலங்கை - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்கள் இழப்புக்கு 536 ஓட்டங்கள் எடுத்தது. இதில் இந்திய துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் விக்கெட்டை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பெரேரா வீழ்த்தினார்.

இது அவரின் நூறாவது விக்கெட்டாகும். இதன் மூலம் இலங்கை அணி சார்பில் வேகமாக 100 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெரேரா பெற்றுள்ளார்.

இலங்கை ஜாம்பவான்களான முரளிதரன், சமீந்தா வாஸ் போன்றோர் கூட இதை செய்யாத நிலையில் வெறும் 25 போட்டிகளில் விளையாடி பெரேரா இந்த சாதனையை படைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்