வீரர்களின் பாதுகாப்பு முக்கியம்: இலங்கை பயிற்சியாளர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, காற்று மாசு காரணமாக நேற்று தடைபட்டது. இந்நிலையில், வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என இலங்கை பயிற்சியாளர் நிக் போதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த இந்தியா, இலங்கையின் டெஸ்ட் போட்டியில், காற்று மாசு காரணமாக ஆட்டம் சில நேரம் பாதிக்கப்பட்டது. இலங்கை வீரர்களில் சிலர் முகக்கவசம் அணிந்து கொண்டு தொடர்ந்து விளையாடினர்.

ஆனால், இலங்கை வீரர்கள் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, முன்னதாகவே இரண்டாம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இலங்கை பயிற்சியாளர் நிக் போதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘டெல்லியில் காற்று மாசு பற்றி எல்லோருக்கும் தெரியும். வீரர்கள் ஆடுகளத்தில் மூச்சு விட சிரமப்பட்டனர்.

வழக்கமான சீதோஷ்ண நிலை இல்லாததால் வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உடை மாற்றும் அறைக்கு திரும்பிய லக்மல், கமகே, தனஞ்செயா ஆகியோர் தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தனர்.

பின்னர், மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த பிரச்சனை கிரிக்கெட்டிற்கு புதிது. அதனால் என்ன செய்ய வேண்டும் என்பதனை நடுவர்களிடமே விட்டுவிட்டோம்.

நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாடதான் வந்துள்ளோம். அதை நிறுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. மேலும், வீரர்களின் பாதுகாப்பும் முக்கியம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்