சதம் அடித்ததை கிரிஸ்மன் ஸ்ரைலில் கோஹ்லியுடன் கொண்டாடிய முரளி விஜய்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சதம் அடித்த மகிழ்ச்சியை முரளி விஜய் கோஹ்லியுடன் கிரிஸ்மன் ஸ்ரைலில் வித்தியாசமாக கொண்டாடினார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணிஇ முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலிரண்டு டெஸ்டின் முடிவில்இ இந்திய அணிஇ 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அணித்தலைவர் கோஹ்லியுடன் துவக்க வீரர் முரளி விஜய் சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 7விக்கெட்டுக்கு 536 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 155 ரன்கள் எடுத்த போது அவுட்டானார்.

இந்நிலையில் தனது 11வது சதத்தை எட்டிய பின் முரளி விஜய் அதை வழக்கமான அமைதியான முறையை விடுத்து வித்தியமாக டான்ஸ் ஆடி கொண்டாடினார்.

இவருடன் சேர்த்து அணித்தலைவர் கோஹ்லியும் இந்த மகிழ்ச்சியை 'டப்' எனும் நடனமுறையில் கொண்டாடினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்