தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்தியா அணி அறிவிப்பு: 6 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடம்

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது இலங்கைக்கு எதிராக மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இத்தொடர் 24-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இத்தொடர் முடிந்த பின்பு இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஜனவரி மாதம் 5-ஆம் திகதி துவங்கவுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா செல்லவிருக்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்கா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இருக்கும் என்பதால் இந்தியா 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதில் ஹர்திக் பாண்டியா உடன் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்

 • விராட் கோஹ்லி (தலைவர்)
 • முரளி விஜய்
 • லோகேஷ் ராகுல்
 • தவான்
 • புஜாரா
 • ரகானே (துணை தலைவர்)
 • ரோகித் சர்மா
 • சகா
 • அஸ்வின்
 • ஜடேஜா
 • பார்தீவ் பட்டேல்
 • ஹர்திக் பாண்டியா
 • புவனேஸ்வர் குமார்
 • மொகமது ஷமி
 • இஷாந்த் சர்மா
 • உமேஷ் யாதவ்
 • பும்ரா

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்