தோல்விகளை கண்டு நான் பயப்படவில்லை: யுவராஜ் சிங்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

கடந்த 17 வருடமாக நான் தோல்வி அடைந்துகொண்டே இருக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தோல்விகளை கண்டு நான் பயப்படவில்லை. வாழ்க்கையில் மேடு பள்ளங்களை சந்தித்தவன்தான் நான். வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் தோல்வி அடைய வேண்டும். "நீங்கள் வெற்றிபெற்ற மனிதராக இருக்க வேண்டும் என்றால் முதலில் தோற்கடிக்கப்பட வேண்டும்." அதுதான் உங்களை அடுத்தக் கடத்துக்கு அழைத்துச் செல்லும்.

நான் இப்போதும் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறேன். அடுத்து எந்த விதமான போட்டியில் விளையாடப் போகிறேன் என்று தெரியவில்லை. வயதாகிக்கொண்டு இருப்பதால் என்னை கடுமையான பயிற்சிக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கிறேன். 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் வரை விளையாடுவேன் என்றும் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுனிசெஃப் நடத்திய விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறும்போது, ‘கடந்த 17 வருடமாக தோல்வி அடைந்துகொண்டே இருக்கிறேன். கடந்த மூன்று உடல்தகுதி சோதனையில் தோல்வி அடைந்தேன். ஆனால், இப்போது இறுதியாக அதில் தேறி இருக்கிறேன்.

இந்திய தேர்வாளர்களால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் யுவி , சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு பின்னர் அணிக்கு தேர்வாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்