புதிய சாதனை படைத்த லெஜண்ட் சந்திமால்!: புத்துணர்வு பெறும் இலங்கை அணி!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியான டெல்லி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் லெஜெண்ட் சந்திமால் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்த ஆண்டிலே அதிகமான தடவைகள் 300 க்கும் அதிகமான பந்துகளை டெஸ்ட் போட்டிகளில் சந்தித்ததே அந்த சாதனையாகும்.

கொழுப்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் 300 பந்துகளை சந்தித்து 138 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

அதன்பின்னர் பாகிஸ்தானை வெள்ளையடிப்பு செய்த தொடரில் அபுதாபி மைதானத்தில் 372 பந்துகளை சந்தித்து 155ழூ ஓட்டங்களை ஆட்டமிழக்காது குவித்திருந்தார்.

நடைபெற்றுவரும் டெல்லி டெஸ்ட் போட்டியிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சந்திமால் மொத்தமாக 361 பந்துகளை சந்தித்து 164 ஓட்டங்களை பெற்றpருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்திமாலை அடுத்து இந்தாண்டில் 3 தடவைகள் 250 க்கும் அதிகமான பந்துகளை இந்திய வீரர் புஜாரா சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் தனது 80 வது இன்னிங்ஸில் பத்தாவது டெஸ்ட் சத்தத்தை பூர்த்தி செய்த சந்திமால்இ மத்தியூஸுடன் இணைத்து நான்காவது விக்கெட்டில் 477 பந்துகளை சந்தித்து 181 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டம் புரிவதற்கும் காரணமாக திகழ்ந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்