இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: 373 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த இலங்கை அணி

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 373 ஒட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது.

அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 164 ஒட்டங்கள் எடுத்தார்.

டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில், கடந்த 2ஆம் திகதி தொடங்கிய கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 536 ஒட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதனைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 130 ஒவர்களில் 9 விக்கெட்டுக்கு 356 ஒட்டங்கள் சேர்த்தது. இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டத்தினை தொடர்ந்த இலங்கை, மேற்கொண்டு 17 ஒட்டங்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட் ஆனது.

அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 164 ஒட்டங்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில், அஷ்வின், இஷாந்த் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

தற்போது வரை, இந்தியா 15 ஒவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ஒட்டங்கள் எடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. மேலும், இலங்கையை விட 195 ஒட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்