லயனை சமன் செய்த அஸ்வின்: ஓர் ஆண்டில் அதிக விக்கெட்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய வீரர் நாதன் லயனை சமன் செய்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலமாக, இந்த ஆண்டில் 11 டெஸ்ட்களில் விளையாடி 55 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அஸ்வின்.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனை சமன் செய்துள்ளார். லயன், 9 டெஸ்ட்டில் விளையாடி 55 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஒரு இன்னிங்ஸின் சிறந்த பந்துவீச்சில், லயன் 50 ஒட்டங்கள் விட்டுகொடுத்து 8 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். அஸ்வின் 41 ஒட்டங்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

இருவரும், இந்த ஆண்டுக்கான அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடங்களில்,

தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா 54 விக்கெட்டுகளும், இலங்கை வீரர் ஹெராத் 52 விக்கெட்டுகளும், இந்திய வீரர் ஜடேஜா 51 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்