இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விராட் கோஹ்லி கை அசைவுக்கு ஏற்ப ரசிகர்கள் கரகோஷத்தை வெளிப்படுத்தியது சுவாரசியமாக இருந்தது.
இலங்கை - இந்திய அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 536 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்த நிலையில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 373 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
163 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 5 விக்கெட்டுக்கு 246 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 410 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை விளையாடி வருகிறது.
இந்நிலையில் பீல்டிங் செய்யும் போது இந்திய அணி தலைவர் கோஹ்லி செய்த வித்தியாச செயல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
அதாவது, மைதானத்தில் இருந்த ரசிகர்களை கோஷமிட்டு தங்களை உற்சாகப்படுத்தும்படி கோஹ்லி சைகையில் சொன்னார்.
இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். இதற்கு கோஹ்லி இரு புறத்திலும் மாற்றி மாற்றி கை அசைக்க, இரு பக்கங்களிலும் அமர்ந்திருந்த ரசிகர்கள் மாற்றி மாற்றி கோஷமிட்டனர்.
இதன் பின் அதிகமாக கோஷமிட்ட ரசிகர்களை நோக்கி அவர்கள் வெற்றி பெற்றதாக கோஹ்லி விரலை தூக்கி காட்டியது சுவாரசிய விடயமாக அமைந்தது.