கோஹ்லிக்கு இத்தாலியில் திருமணமா? அனுஷ்கா சர்மா தரப்பு சொன்ன பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்தே பழகி வருகின்றனர்.

இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியது, அதன் பின் இருவரும் சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

அதில் ஒரு அங்கமாக கடந்த 2015-ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரின் இந்திய அணியின் ஆட்டங்களில் அனுஷ்கா ஷர்மாவைப் பார்க்க முடிந்தது.

இதையடுத்து இவர்கள் குறித்து பல்வேறு வதந்திகள் வந்தன, இந்நிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வு கோஹ்லி-அனுஷ்காவின் திருமணத்திற்காகவே என்று கூறப்பட்ட நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இவர்களின் திருமணம் வரும் 9,10 அல்லது 11-ஆம் திகதிக்குள் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெறவிருக்கிறது என்று செய்தி வைரலாக பரவியது.

ஏனெனில், கோஹ்லி–அனுஷ்கா உறவினர்கள், நண்பர்கள் இத்தாலி செல்ல டிக்கெட் வாங்கியுள்ளனர்.

போட்டோகிராபர்கள், மேக் அப் ஆர்ட்டிஸ்ட், டிசைனர்கள் உள்ளிட்டோரும், குறிப்பிட்ட திகதியில் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். திருமண ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்ய, ஜோதிட நிபுணர்கள் அனுஷ்கா வீட்டுக்கு சென்று வந்ததும் தெரியவந்ததால், இந்த செய்தி ஊடங்களில் வெளியானது.

இந்நிலையில் இதை அறிந்த அனுஷ்கா சர்மா தரப்பு இது எல்லாம் வதந்தி என்று தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்